மேசடி செய்யப்பட்ட 3600 உர மூடைகள் கண்டுபிடிப்பு!

Monday, April 30th, 2018

உற்பத்தி செய்த நாட்டின் பெயர் மற்றும் காலாவதியான திகதி என்பன மாற்றப்பட்ட நிலையில் விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 9 தொன் உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா, ஹுணுமில்ல பகுதியிலுள்ள தனியார் உர களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட தேடுதலின் போதே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் 9 மெற்றிக்தொன் உரத்தை கைப்பற்றியுள்ளனர்.

உற்பத்திசெய்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன் காலாவதியாகும் திகதியும் மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மூடையும் 25 கிலோ கொண்டதாகவும் 3600 மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த உரத்தை நெதர்லாந்தில் உற்பத்தி செய்துள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்த உரம் 2019 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இதனை 2020 ஆம் ஆண்டு காலாவதியாகும் என அச்சிடப்பட்டு உர மூடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. 3600 உர மூடைகளும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கைப்பற்றி கொண்டுவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரட்ண தெரிவித்தார்.

அத்துடன் தனியார் உர நிறுவன முகாமையாளர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் நிறுவனத்துக்கு எதிராக மினுவாங்கொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

Related posts: