மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!
Thursday, April 8th, 2021பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின், விக்டோரியா சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின் கீழ் பல மாதங்களின் பின்னர் பயணிகள் விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் – 604 என்ற விமானம் அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த 11 பயணிகள் பேருந்து மூலம் இருவார கால தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக பாதுகாப்புடன் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை டோஹா, சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து இன்றையதினம் மொத்தம் 106 பயணிகள் வருவார்கள் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|