மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி – நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!

மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவுக்கான புதிய தூதுவராக அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும், எயார் மார்ஷல் (ஓய்வு) சுதர்சன் கரகொட பத்திரன நேபாளத்துக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அறிவித்துள்ளது.
பல நாடுகளுக்கான இராஜதந்திரிகளை அரசாங்கம் மாற்றிவரும் பின்புலத்தில் இந்த மூன்று நியமனங்களும் வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, விரைவில் இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவரும் நியமிக்கப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிவில் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார்!
இலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்!
எந்தமுறையில் தெரிவானாலும் அனைவரும் உறுப்பினர்களே!
|
|