மூன்று மாவட்டங்களில் மின்தடை அமுல்  

Tuesday, October 10th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(10) மின்சாரத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் கொல்லங்கலட்டி, மாவை கலட்டி,வித்தகபுரம், கூவில், நல்லிணக்கபுரம்,  கீரிமலை, கீரிமலைச் சந்திக் கடற்படை முகாம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் பறயனாலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் C.T.B, கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை,ரைமெக்ஸ் கார்மென்ட், விசேட அதிரடிப்படை முகாம், எருக்கலம் பிட்டி பம் கவுஸ், பேசாலை Palamayarah House, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மேன் ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும்
காலை-08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெளுக்குளத்திலிருந்து பம்பைமடு வரை, முகத்தான்குளம், கிறிஸ்தவ குளம், கதிர்காமநகர், அருவித் தோட்டம், ஆண்டியபுளியங்குளம், பீடியா பாம், மெனிக் பாம் வலயம்-02, வலயம் -03, வலயம்-04, சக்திகம, மல்வத்தோயா, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி , பம்பைமடு பல்கலைக்ககழகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: