மூன்று மாதங்களில் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் தகவல்!

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 10 ஆயிரத்து 661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனவரியில் 3ஆயிரத்து 350 வாகனங்களும், பெப்ரவரியில் 3 ஆயிரத்து 661 வாகனங்களும், மார்ச் மாதத்தில் 3 ஆயிரத்து 650 வாகனங்களும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இவற்றில் மோட்டர் சைக்கிள்கள் தான் அதிகளவில் 3,525 புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த காலகட்டத்தில் ஏறத்தாள ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 937 வாகன உரிமையாளர் இடமாற்றங்கள் நடந்ததாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் - சீனத் தூதுவர் தெரிவிப்பு...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
வரலாறு காணாத அளவில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் கவலை!.
|
|