மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ !

Saturday, May 29th, 2021

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று 29 ஆம் திகதிமுதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

இருப்பினும், வாடிக்கையாளர்கள் இதற்காக வருவது சாத்தியமில்லை என்றும் சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார மையங்களுக்கு வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கவும் கொண்டு செல்லவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளிலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார மையங்களுக்கு வருகைத்தர வேண்டுமென்ற காரணத்திற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனியார் பயணங்கள், போலிஆவணங்களை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: