மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!

தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக சபையின் அவசர மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீர் மின்னுற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் காலப்பகுதியில் இந்த மின் நிலையங்களினூடாக நாளாந்தம் 170 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, குறித்த 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!
தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - நிறுவனங்களின் தலைவர...
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் - தேசிய சிறுவர் பாதுகாப்ப...
|
|