மூன்று தசாப்தத்தின் பின்னர் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர்!

Saturday, June 11th, 2016

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  கடமையை  இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம்(11) சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.

34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்த இவர் இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக தற்போது கடமையாற்றியிருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்ணத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார். பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவா...
மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது - எதிர்வரும் 3 மாதங்களுக்கு...