மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது – தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியானது தகவல்!

Thursday, January 11th, 2024

பல்வேறு காரணங்களுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எடுக்கவில்லை.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், முப்படைகள், மாகாண சபைகள் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி ஒதுக்கீடுகளாக ( Approved Cadre) 17,15,417 வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்த எண்ணிக்கையில் தற்போது பணி புரிபவர்களின் எண்ணிக்கை 13,93,883 ஆகும். நிரப்பப்படாமல் இருக்கும் வெற்றிடங்களாக 321, 534 உள்ளன.

பட்டதாரிகள் உள்ளிட்ட பலரும் வேலைக்காக காத்திருக்கும் போது  கல்வி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களின் பதவி நிலைகள் நிரப்பப்படாமலுள்ளமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: