மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் – பொதுஜன பெரமுன நம்பிக்கை!

Tuesday, March 3rd, 2020

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியும் என பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தை அண்மையில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட்டால் அதன் மூலம் 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய முடியும். இன்று நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 19ஆவது திருத்தமே காரணம்.

உதாரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்படுகின்ற போதும் 19ஆவது திருத்தம் காரணமாக அவரை அரசாங்கத்தினால் பதவியில் இருந்து நீக்க முடியாது.

அதேபோன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று பேர் அடங்கியுள்ளனர். இதில் ஒரு உறுப்பினர் செயற்பட மறுத்தாலும் ஆணைக்குழுவினால் இயங்க முடியாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார்.

Related posts: