மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றுடன் பாடசாலைகளுக்கு பூட்டு!  

Friday, December 8th, 2017

3 ஆம் தவணை விடுமுறைக்காக அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், இன்று(08) முதல் மூடப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(12) ஆரம்பமாகின்றது. இதற்குரிய சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இம்முறை 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: