மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை!

Monday, May 23rd, 2022

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருசிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கலப்படங்களை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தமக்கு தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

ஆகவே அவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆகவே இவ்வாறான தொழில்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், இது குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: