மூன்றரை கோடி பெறுமதியான  தங்கத்துடன் இருவர் கைது!

Monday, March 7th, 2016

மாதகல் கடற்பரப்பில் நேற்று (06) 6.94 கிலோகிராம் தங்கக்கட்டிகளுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள் சுமார் 34.5 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை. சந்தேகநபர்கள், தங்கக்கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்த முற்பட்ட வேளையில் கடற்படையினர் இவர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Related posts: