மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்!

மூத்த ஊடகவியலாளரான நா.நவரட்ணராஜா இன்று செவ்வாய்க்கிழமை(08-03-2016) அதிகாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்றிருந்த அவர் நேற்றுத் திங்கட்கிழமை திடீரெனக் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை அதிகாலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் கிராம நிர்வாக அலுவரான இவர் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டவராவார். யாழ்ப்பாணத்தில் போர் நெருக்கடி மிகுந்த காலத்திலும் துணிவுடன் பணியாற்றியவர்.
வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரான அவர் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட், உதைபந்தாட்ட மத்தியஸ்தருமாவார்.
அன்னாரின் பூதவுடல் மல்லாகம் சோடாக் கம்பனி ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|