மூத்த அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் காலமானார்!

Thursday, June 25th, 2020

இலங்கையின் மூத்த அனுபவம்மிக்க அறிவிப்பாளர் நடிகர் என்ற பல துறைகளிலும் முன்னிலை வகித்த சி.நடராஜசிவம் சுகவீனம் காரணமாக நேற்று இரவு 11.30க்கு அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அவரின் உடலம் இன்று ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டு பிற்பகலில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்புத்துறையை ஆரம்பித்த, நடராஜசிவம் இலங்கையின் வானொலித்துறைக்கு புதிய வடிவத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: