மூத்தபோராளி சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில்!

Thursday, July 7th, 2016
ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்தபோராளி தோழர் சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை(08.07.2016) பொறளை இந்துமயானத்தில் இடம்பெறவுள்ளது.
தோழர் சந்திரமோகன் அவர்கள் நீண்ட நாட்களாக நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  கடந்த 5ஆம் திகதி கொழும்பில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல்ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளைக் காலை 8 மணிக்கு பொறளை ஜெயரட்ண  மலர்ச்சாலையில் உறவினர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள்; மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பூதவுடலுக்கு காலை 9 மணிக்கு,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்துவார்.
பிற்பகல் 2 மணிக்கு சமயக்கிரியைகள் நடைபெற்றுஅதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தோழர் சந்திரமோகனின் இறுதி நிகழ்வில் நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

chandramohan anna photo 05.07.2016 death

Related posts: