மூதூர் – தொண்டமானாறு பேருந்து சேவை திங்கள் முதல்!

Saturday, October 15th, 2016

இலங்கை போக்குவரத்துச் சபையினால் தொண்டமானாற்றிலிருந்து மூதூர் வரை புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் 17ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி தெரிவித்தார். காலை 9.30மணிக்கு தொண்டமானாற்றிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை வந்து மு.ப 10.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து புறப்பட்டு வவுனியா ஊடாகத் திருகோணமலை சென்று மூதூர் வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது.

இதேபோல் மூதூரிலிருந்து காலை 7மணிக்கு புறப்பட்டு திருகோணமலை வந்து அங்கிருந்து மு.ப 10.30 மணிக்கு புறப்பட்டு பருத்தித்துறை வந்தடையவுள்ளது. இதுவரை 11 மணிக்கு பருத்தித்துறையில் வவுனியா சென்ற பேருந்து நாளை மறுதினம் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 11.30 மணிக்கு புறப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SLTB_CTB_LOGO_1965_1970_CLASSIC

Related posts: