மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மாதம் விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்கள் அனைவரும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதன் பின்னரே குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்த அனைவரும் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: