மூச்சுத்திணல் – பறிபோன 3 மாத குழந்தையின் உயிர் – யாழ் இணுவிலில் சோகம்!

Thursday, December 23rd, 2021

யாழ்ப்பாணத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மூன்றரை மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைச் சேர்ந்த மூன்றரை மாத ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (22) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை திடீரேன மூச்சடங்கி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: