முஸ்லிம் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக மாற்றப்படும் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, January 7th, 2021

முஸ்லிம் விவாக சட்டம் திருத்தப்பட்டு, குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், பெண்ணுக்கான திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனை திருத்தம் செய்ய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு சில முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், சட்டத்தை திருத்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் விவாக சட்டம் திருத்தப்பட்டு, குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்படவுள்ளதாக நீதி அரைமச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: