முஸ்லிம் ஒருவர் உள்ளிட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் கொழும்பில் கைது!

Thursday, November 30th, 2017

யாழ்ப்பாணத்தை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வந்த ஆவாக்கு குழு உறுப்பினர்கள் என நம்பப்படும் ஒரு முஸ்லிம் உள்ளிட்ட ஆறு பேர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

யாழ்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின அடிப்படையில் இவ் 6 பேரும் கொழும்பில் வைத்து நேற்றுக்கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டடுள்ளனர்.

கோண்டாவிலைச் சேர்ந்த சிவகுமார இதியோன் வயது 20, வவுனியாவைச் சேர்ந்த அலாவுதின் முகமட் விக்ரம் வயது 22 மற்றும், இராஜேந்திரன் செந்தூரன் வயது 17 உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Related posts: