முல்லை. கட்டுக்கரைக்குளம் புனரமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கின்றது – விவசாயிகள் கவலை.

Thursday, July 14th, 2016

முல்லைத்தீவு கட்டுக்கரைக்குளம் உரியமுறையில் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தாம் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும், இதுவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையற்றிருக்கின்றார்கள் என அக்குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய குளங்களில் கட்டுக்கரைக்குளமும் ஒன்றென்பதுடன் அதன் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற்செய்கையும், விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அக்குளத்தினை புனரமைப்பு செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போது, அதனைசெய்து தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் வாக்குறுதி யாகவிவசாயிகளிடம் தெரிவித்திருந்தனர்.

இக்குளத்தின் புனரமைப்புத் தொடர்பாகநாம் பல முறைகோரிக்கைகளை முன்வைத்த போதிலும் தேர்தல் முடிந்து இதுவரையானகாலத்தில் ஒருநாளிலாவது எமது பிரச்சினைகள், இடர்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, வடக்குமாகாணசபையின் விவசாய அமைச்சரோ, உறுப்பினர்களோ நேரில் வருகைதந்து கேட்டதோ இது விடயத்தில் அக்கறை செலுத்தியதோ இல்லைஎன்பதே எமக்குள்ள கவலையாகும்.

தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளுக்காகவும் தமது வெற்றிகளுக்காகவும் எம்மிடம் வரும் கூட்டமைப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கி வெற்றிகளை தமதாக்கிக் கொண்டதன் பின்னர் வாக்களித்த எம்மையும், வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து தமதுசுயலாப அரசியலை முன்னெடுப்பதையே நோக்காகக் கொண்டுசெயற் படுகின்றனர்  என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இக்குளத்தின் மீள்புனரமைப்புக்கென முன்னைய அரசினால் 3,360 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டிய விவசாயிகள் அந்தநிதிக்கு என்ன நடந்தது என்பதை தம்மால் அறியமுடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டுக்கரைக்குளம் உரியமுறையில் புனரமைப்பு செய்யப்படாதவிடத்து காலப்போக்கில் நெல் மற்றும் விவசாய செய்கைகளைபாரிய இடர்பாடுகளுக்கு விவசாயிகளாகிய நாம் முகங்கொடுக்கவேண்டிய அவலம் தவிர்க்க முடியாததாக அமைந்து விடுமென்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(செய்தி- கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்)


இலங்கைத் தூதர்கள் தொடர்பில் விஷேட கவனம்!
மருத்துவ பீட அனுமதிக்கு உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு கட்டாயம் – இலங்கை மருத்துவ சபை!
சேதமடைந்த நாணயத்தாள்: டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை!
மடு வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு கோரிக்கை!
இலங்கையரின் தகவல்கள் பாதுகாக்கப்படும் : வைபர் செயலி நிறுவனம்!