முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் – இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்தார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் எனவும் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டார்.

இதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காக சந்தித்தார்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்றவகையில் அவசியமான பிடியாணைகளை பிறப்பிக்கும அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவரது இராஜினாமா குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை நீதிபதி ரீ சரவணராஜா ஒரு கிழமைக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றார்.

இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: