முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 பேருக்கு காணிகள் இல்லை – மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழும் 3 ஆயிரத்து 389 பேர் காணியில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகையினை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றும் காணிகள் அற்ற நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
காணி அற்றவர்களுக்கான காணிகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறானவர்கள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் 3 ஆயிரத்து 389 பேர் காணி அற்றவர்களாக இனம் காணப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை மாவட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கான விண்ணப்பங்களில் 28 ஆயிரத்து 676 பேர் தொழில் செய்வதற்கான காணிகளுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
அவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றுள்ளன என்றும் மாவட்ட செயலக புள்ளிவிவர தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|