முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக செல்லும் ரயில் மாங்குளம் ரயில் நிலையத்தில் தரித்துச் செல்ல வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம்!

Saturday, November 3rd, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சுமார் 27 கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்ற கடுகதி ரயில் சேவை முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை என்றும் குறித்த புகையிரத சேவை மாங்குளம் புகையிரத நிலையத்தில் தரித்துச் செல்ல வேண்டுமென பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கான கடுகதி மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை ஊடறுத்துச் செல்கின்றன.

கிளிநொச்சி அறிவியல் நகரிலிருந்து மன்னகுளம் வரைக்குமான சுமார் 27 கிலோமீற்றர் வரையான பகுதிகளை ஊடறுத்துச் செல்கின்ற புகையிரத சேவையின் கடுகதி புகையிரதம் தவிர்ந்த ஏனைய புகையிரதங்கள் மாங்குளம், கொக்காவில், முறிகண்டி ஆகிய இடங்களில் தரித்துச் செல்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் செல்லுகின்ற கடுகதி புகையிரதசேவை முல்லைத்தீவு மாவட்டங்களில் எந்த இடங்களிலும் நிறுத்தப்படுவதில்லை என்றும் இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடுகதி சேவையில் பயணிக்கும் வவுனியா அல்லது கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்குச் சென்றே தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த புகையிரதசேவை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் புகையிரத நிலையத்தில் தரித்துச் செல்ல வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: