முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!

Monday, December 6th, 2021

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் இன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக முல்லைத்தீவு கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது நபரின் சடலத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று மாலை திடீரென கடலில் மூழ்கினர். இதனையடுத்து காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அனர்த்தத்தில் மதவுவைத்த குளத்தை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் தனுஷன் 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன், 26 வயதுடைய தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் ஆகியோரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: