முல்லைத்தீவுவட்டுவாகல்; நந்திக்கடற்பகுதியில் இறந்தநிலையில் மீன்கள்

Friday, June 2nd, 2017

முல்லைத்தீவுவட்டுவாகல் முகத்துவாரம் நந்திக்கடற்பகுதியில் இறந்தநிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

குறித்தபகுதியில் பெருந்தொகையிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாகவும்,இவற்றைஅப்புறப்படுத்தம் நடவடிக்கைகளில் அப்பகுதிசிறுகடல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் கடும் வரட்சியானகாலநிலைகாரணமாகநந்திக்கடலின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமைதான் இம்மீன்கள் இறப்பதற்கானவாய்ப்புகள் இருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நந்திக்கடல் பகுதியில் உள்ள சேற்று மண்ணை அகற்று வதினூடாகவே எதிர்காலத்தில் சிறுகடல் தொழிற்றுறையை பாதுகாத்துக் கொள்ளமுடியுமென்றும், இதுவிடயத்தில் துறைசார்ந்தவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பாகுமென்றும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: