முல்லைத்தீவுமாவட்டத்தில் வரட்சியால் நன்னீர் மீன்பிடிபாதிப்பு!

Thursday, June 8th, 2017

முல்லைத்தீவுமாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிகாரணமாகநன்னீர் மீன்பிடியை தமது வாழ்வாதார தொழிலாகக் கொண்ட குடும்பங்கள் பெருளாதாரரீதியில் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்திலுள்ள வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடியை மேற்கொள்ளும் 80 வரையானகுடும்பங்கள் அதிகபாதிப்பை சந்தித்துள்ளதாகவும், இதனால் தமது நிலையினைக் கருத்தில் கொண்டுதமக்கு நிவாரணத்தைப் பெற்றுத் தருமாறுமக்கள் கோரி;கைவிடுத்துள்ளனர்.

தொடரும் வரட்சிகாரணமாகமுல்லைத்தீவுமாவட்டத்திலுள்ளநீர்நிலைகளில் நீர் குறைவடைந்து வருவதனால் நன்னீர் மீன்பிடியை தமது வாழ்வாதாரத் தொழிலாககொண்டுள்ள குடும்பங்கள் தற்போது பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையிலேயேவவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடியை மேற்கொண்டுவரும் தொழிலாளர்கள்  தமது தொழிலை இழக்கவேண்டிய இக்கட்டானநிலையைஎதிர்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவுமாவட்டத்தின் முக்கியநீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றானவவுனிக்குளத்தின் கீழ் காலபோகம் மற்றும் சிறுபோகம் எனசுமார் பத்தாயிரம் ஏக்கரில் நெற்செய்யை இரண்டுபோகங்களிலும் செய்கைபண்ணப்பட்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: