முல்லைத்தீவில் 4764 பேர் தனிமைப்படுத்தலில்!

Friday, May 21st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து  764 பேர் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிக்கையிட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரத்து 236 குடும்பங்களில் தனிமைப்படுத்தல் பொடுப்பனவு வழங்க வேண்டிய குடும்பங்களாக தற்போது 763 குடும்பங்கள் இனம் காணப்படுவதாகவும் அறிக்கையிட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபோமிலும் கொரோனா இனம்காணப்பட்டவர்களின் குடும்பம் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள்கள் தொடர்பாகவே இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது

2021-05-19 ஆம் திகதிய அறிக்கை மூலம் குறித்த தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: