முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Wednesday, December 1st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்களும்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 46 குடும்பங்களை சேர்ந்த 142 அங்கத்தவர்களும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களுமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

Related posts: