முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு: பல வீடுகள் சேதம்!

Tuesday, February 13th, 2018

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குப்பைகளுக்கு தீ வைக்கும் போது RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டு வெடிப்பினால் அருகிலுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ள போதிலும் யாரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டிலுள்ள குப்பைக்கு தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தின் பின் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இருப்பினும் இச்சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Related posts: