முல்லைத்தீவில் இவ்வாண்டில் 842 ஹெக்டேயரில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை!

Wednesday, August 1st, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 404 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை எதிர்பார்க்கப்பட்டபோதும் 842 ஹெக்டேயரில் மட்டும் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாண்டில் இரண்டாயிரத்து 404 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டு நிலச்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நிலவும் வரட்சி காரணமாக 842 ஹெக்டேயரில் மட்டுமே மேற்படி செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரட்சி காரணமாக 120 ஹெக்டேயர் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 60 ஹெக்டேயரில் மிளகாய்ச்செய்கையும் 38 ஹெக்டேயரில் சின்ன வெங்காயச் செய்கையும் 04 ஹெக்டேயரில் பெரிய வெங்காயச்செய்கையும் 11 ஹெக்டேயரில் சோளச்செய்கையும் 28 ஹெக்டேயரில் பயறுச்செய்கையும் 17 ஹெக்யேடரில் கௌபி செய்கையும் 2 ஹெக்டேயரில் கருணைக்கிழங்குச் செய்கையும் 5 ஹெக்டேயரில் வத்தாளைச்செய்கையும் 2 ஹெக்டேயரில் இராசவள்ளி செய்கையும் 52 ஹெக்டேயரில் மரவள்ளிக் கிழங்குச் செய்கையும் என மொத்தம் 842 ஹெக்டேயரில் மேட்டு நிலச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: