முறையான பேருந்து தரிப்பிடம் இல்லை – யாழ்ப்பாணத்துக்கான தனியார் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக இடை நிறுத்தம்!

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளளன
இருந்தபோதும், உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது!
கண்டி வன்முறை: ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை!
சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறையில் மாற்றம் - மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறை...
|
|