முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, August 4th, 2023

முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடுவலை பகுதியில் பாடசாலையொன்றின் நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 19 ஆயிரம் முன்பள்ளிகள் உள்ளதுடன், அதில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான டிப்ளோமா பயிற்சியும் வழங்கப்படும்.

எதிர்காலத்தில் முறையான சான்றிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: