முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து யாழில் திரண்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள்!

Saturday, October 8th, 2016

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை(07) காலை-10 மணி முதல் ஒன்று திரண்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள் முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

செயலாளர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் இது சம்பந்தமாக வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் பிரதிச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது முறையற்ற நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாகச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளிக்கப்பட்டது.

அத்துடன் செயலாளருடன் இந்த விடயம் தொடர்பில் தாம் நேரடியாகப் பேச வேண்டுமெனப்  போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கான நேரத்தையும் விரைவில் ஒதுக்கி வழங்குவதாக இதன் போது உறுதிமொழி வழங்கப்பட்டது.

unnamed (2)

Related posts: