முருங்கைக்காய் உற்பத்தி வீழ்ச்சி: ஒரு கிலோ 1200 ரூபாவாக விற்பனை!
Tuesday, January 15th, 2019யாழ்ப்பாண குடாநாட்டில் முருங்கைக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்தைக்கு வந்து சேர்ந்த முருங்கைக்காய்க்கு கேள்வி அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் 1200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது முருங்கைக்காய் பருவகாலம் இல்லாவிட்டாலும் சில இடங்களில் முருங்கை மரங்கள் பூத்துக் காய்த்துள்ளன. சிலர் விற்பனைக்காக பிஞ்சாகவே கொண்டுவந்து விற்பனை செய்தனர். இதேவேளை கடந்த ஆண்டின் காலபோகத்தின்போது கூடுதலாக கறிமுருங்கைகள் பூத்துக் காய்த்தன.
கடந்த காலங்களில் முருங்கைக்காய்கள் அதிகளவில் சந்தைக்கு தாராளமாக வந்து சேர்ந்ததால் அவற்றின் விலை பெரும் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது.
Related posts:
தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை பசில் ஏற்க வேண்டும் - அமைச்சர் பைசர்!
8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறை!
1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ள...
|
|