முரளிக்கு அதி உயர் கௌரவம்!

Wednesday, July 27th, 2016

சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெறவுள்ளார் என தெரிவிக்கப்படகின்றது.

இது தொடர்பான இன்று(27) அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை உலக கிரிக்கெட் சபை, தனது அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கின்றது.

இம்முறை குறித்த விருதுக்கு முரளியும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதனைப் பெறும் முதல் இலங்கை வீரர் முரளிதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை முரளியுடன் கரேன் ரொல்டன், ஆர்தர் மோரிஸ், ஜோர்ஜ் லோமேன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts: