மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016

மும்­மொழிக் கொள்­கையை அமு­லாக்கும் செயற்­பா­டுகள் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக காணப்பட­வில்­லை­யென சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா மும்­மொழி அமு­லாக்­கத்தை உறுதிசெய்­வ­தற்­கான கண்­கா­ணிப்புக் குழு நிய­மிக்­கப்­பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளு­மன்­றத்தில் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் தேசிய கலந்து­ரையாடல் சக­வாழ்வு மற்றும் அரச கரும மொழி கள் அமைச்சர் மனோ கணே­ச­னிடம் மும் ­மொழி அமுலாக்கல் மற்றும் வடக்கு, கிழக் கில் காணப்­படும் மொழி ரீதி­யான பிரச்­சி ­னைகள் தொடர்­பாக விசேட கூற்றை முன்­வைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

அவர் மேலும் கூறு­கையில், தமிழ் மொழி யும் சிங்­கள மொழியும் அரச கரும மொழி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பின் 13, 14 ஆம் சரத்­துக்­களில் மொழி­யு­ரிமை தொடர்­பு­பட்­டுள்­ள­தோடு தெளி­வாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மட்­டு­மின்றி அடிப்படை உரி­மை­களிலும் மொழி காணப்­ப­டு­கின்­றது

அவ்­வா­றான நிலையில் மும்­மொழி அமு­லாக்கம் தற்­போதும் கிடப்­பி­லேயே காணப்படுகின்­றது. குறிப்­பாக வடக்கு, கிழக்கில் தற்­போதும் சுற்­று­நி­ரு­பங்கள், மத்­திய அர­சாங்­கத்தின் திணைக்­க­ளத்தின் அறி­வித்­தல்கள் ஆகி­யன சிங்­கள மொழி­யி­லேயே வெளி­வ­ரு­கின்­றன. அது மட்­டு­மின்றி பிர­தேச செய­லா­ளர்கள், திணைக்­க­ளங்கள், அரச நிறு­வ­னங்­களில் பொதுமக்கள் தமது ஆட்­சி­யு­ரிமை மொழியில் எவ்­வி­த­மான செயற்பாடுக­ளையும் முன்­னெடுக்க முடி­யாத நிலையில் இருக்­கின்­றனர்

அதுமட்­டு­மின்றி மொழி ரீதி­யான பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்கொடுத்தவண்ணமிருக்கின்­றனர். வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலை­யங்­களில் தமிழ் மொழி மூல­மான முறைப்­பா­டு­களை செய்ய முடி­யாத நிலை நீடித்துக் கொண்டிருக்கி­றது

ஆட்­சி­யு­ரிமை மொழி­யான தமிழ் மொழியை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தாமை மொழியுரிமை மீறல் என்­ப­தற்கு அப்பால் மனித உரிமை மீற­லு­மாகும். அவ்­வா­றான நிலையில் மும்­மொழி அமு­லாக்­கத்­தினை உறுதிசெய்து கொள்வதற்கு ஏற்ற வகையில் கண்­கா­ணிப்புக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென பரிந்­துரை செய்­கின்­றனர்

அதே­வேளை, நாட­ளா­விய ரீதியில் 72 பிர­தேச செய­ல­கங்கள் இருமொழி பிர­தேச செயலகங்­க­ளாகக் காணப்படுகின்றன. எனினும் அங்கு மொழி பெயர்ப்­பா­ளர்கள் முழுமை­யாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை

அதே­போன்று அரச நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்­க­ளிலும் மொழி பெயர்ப்­பா­ளர்கள் பற்றாக்­குறை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் தங்­க­ளு­டைய அமைச்­சா­னது மும்­மொழி அமு­லாக்கம் தொடர்­பாக எடுத்­துள்ள எஞ்­சி­யுள்ள நட­வ­டிக்­கைகள் என்ன? குறிப்­பாக கல்வி அமைச்சில் தமிழுக்கு தனியான பிரிவு காணப்படுகின்ற போதும் தொடர்ந்தும் சிங்கள மொழியிலான சுற்றுநிருபங்கள், அறிவித்தல்கள் வெளியிடப்படுவதற்கான காரணம் என்ன? வடக்கு, கிழக்கில் காணப்படும் தமிழ்மொழி பொலிஸாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: