முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர வேண்டுகோள் 

Tuesday, August 8th, 2017
முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் நாளை புதன்கிழமை(09) முற்பகல்- 9.30 மணிக்கு யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக  ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அரச வர்த்தமானி  கோரப்பட்டுள்ளது  எனினும்,  இவ் வர்த்தகமானியில் குறித்த நியமனத்திற்கான  வயது 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையை 45 வயதாக அதிகரிக்க வேண்டுமெனவும், பட்ட இறுதித் திகதியை உள்வாங்குதல் வேண்டுமெனவும் கோரி வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர்கள்  கையளிக்கப்படவுள்ளன.
எனவே, இதனைக் கருத்திற் கொண்டு அனைத்து 35 வயதிற்கும் மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளையும் உரிய நேரத்தில் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

Related posts:


தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசுவது சிறந்தத...
வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நி...
செப்ரெம்பர் - முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை– முழுமையான ஆதரவை வழங்குமாறு கல்வி...