முப்படையினர், பொலிசார், சுகாதார தரப்பினருக்கே இலவசமாக வழங்கப்படும் – கொரோனா தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து!

Wednesday, January 20th, 2021

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நிதி அமைச்சின் கீழான விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர் –

இலங்கையில் கொரோனா பரவல் இருக்கின்ற நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர், ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் கூட இன்னமும் கொரோனா தடுப்பூசி குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் எதனையும் முன்வைக்கவில்லை. தடுப்பூசி குறித்து இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே சென்றுகொண்டுள்ளது.

எனினும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்து அந்த குழு இப்போது சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் 20 வீதமானவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இதில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை சுகாதார தரப்பினருக்கும், முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல் மக்கள் தொகையில் 52 வீதமானவர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதிற்கு குறைந்த எவருக்கும் வழங்க முடியாது.

எனவே இந்த தடுப்பூசிகளில் 20 வீதம் இலவசமாக கிடைக்கின்றது, ஏனைய தொகையை விலைகொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: