முப்படைகள் மற்றும் போலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் – டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் இணக்கம்!

அடிஅ Thursday, September 8th, 2016

எதிர் காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் போலிஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான  டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு  அறிவித்துள்ளார்.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக தெரிவித்திருந்தார். அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேட்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு முன்வரவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 206 தமிழர்கள் போலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவித்த பிரதமர்  இவர்கள் தற்போது வடகிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த பிரதமர் விரம்சிங்க, அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமென்று மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடிஅ


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்வு!
நாட்டின் மோசமான பயங்கரவாதி வடக்கின் முதல்வர் - சோபித தேரர்
‘பிரிக்ஸ்’  அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!
பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை – அமைச்சர் ராஜித...
கச்சாய் - பருத்தித்துறை வீதியில் 21 கிலோ மீற்றருக்கு காப்பெற் - முதற்கட்ட பணிகள் ஆரம்பம் கம்பங்கள் ப...