முன்மாதிரியான சமுர்த்தி திட்டம் இலங்கையில் – அமைச்சர் எஸ்பி திசாநாயக்க!

நாட்டில் சமுர்த்தி திட்டத்தினூடாக வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை (www.asma.lk) எஆரம்பித்துவைக்கும் நிகழ்வு அமைச்சர் எஸ்பி திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. முகாமையாளரின் சங்கத்தின் பணிகள் தொடர்பாக தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,
நாம் தற்காலிகமாக 2ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குகின்றோம். மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் எந்தவித பணியும் இன்றி இருக்கின்றனர். பட்டதாரிகளை முகாமைத்துவ இணைப்பாளர்களாக இணைத்துக்கொள்வே இவ்வாறான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது புதிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். இவர்களை அரச ஊழியர்களாக நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். நாம் முன்னெடுத்துள்ள வறுமையொழிப்பு வேலைத்திட்டம் அன்று இருக்கவில்லை. உலகநாடுகளிலும் இருக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை எமக்குண்டு என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|