முன்பள்ளி கல்விச்சான்றிதழ் கற்கைக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, March 21st, 2019

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிக் கல்விச்சான்றிதழ் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்த முன்பள்ளி கல்விச்சான்றிதழ் கற்கை நெறிக்கு மார்ச் 24 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடிவதுடன் ஒரு வருட கற்கைக்காலத்தைக் கொண்ட இப்பாட நெறி மும்மொழிகளில் கொழும்பு மற்றும் கண்டி பிராந்திய நிலையத்திலும் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம், மன்னார், ஹற்றன், வவுனியா, மற்றும் கிளிநெச்சி ஆகிய இடங்களில் உள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்திலும் நடைபெறவுள்ளன.

இக்கற்கைநெறிக்கு விண்ணப்ப முடிவுத்திகதி அன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் கல்விப் பொது சாதாரணப்பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட  குறைந்தது ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

இப்பாட நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடிவதுடன் கற்கை தொடர்பான விபரங்கள் அடங்கிய கையேட்டினை http://www.ou.ac.lk  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடிவதுடன் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் அருகில் உள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: