முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 25th, 2020

முன்பள்ளி சார்ந்த ஆசிரியர்களின் பிரச்சினைகளை அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வந்து அதனை தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி கலந்து கொண்ட மக்கள் சந்திப்புக்களில் மக்கள் தெரிவித்த விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாத்தரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
நெடுந்தீவில் குடிநீர் பற்றாக்குறை - மேலதிக நீரை வழங்குமாறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை...
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் - வடக்கு ஆளுநரின் வழிகாட்டலில் இன்று ஆரம்பித்துவ...