முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!

Saturday, January 19th, 2019

வடமாகாணத்தில் உள்ள 350 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறி இன்று 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம், நாவலர் வீதி, ரி.ஸி.ரி. மண்டபத்தில் ஆரம்மாகின்றது.

யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வலயம் தவிர்ந்த ஏனைய வலயங்களின் முன்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பயிற்சி நெறியில் பங்குபற்றவுள்ளனர்.

வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையின் முன்பள்ளிக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் இந்தப் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்கு தமது வலய முன்பள்ளி ஆசிரியர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று இந்தப் பயிற்சி நெறியை ஒழங்குபடுத்தி நடத்தும் ஆறுதல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தரம் டிவகலாலா கவலை தெரிவித்தார்.

Related posts: