முன்பதிவு செய்வது கட்டாயம் – பொது மக்களிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட கோரிக்கை!

Monday, October 19th, 2020

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றுமுதல் தமது சேவைகளை ஆரம்பித்தள்ளன.

ஆனாலும் பொதுமக்கள் தமக்கு அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் இயலுமான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் – பொதுமக்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்னதாக திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்து சேவைகளைப் பெறலாம் எனவும்,

முன்பதிவு செய்யாமல் வருபவர்கள் அலுவலக வளாகத்துக்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: