முன்னேற்றம் அடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை!

Friday, December 23rd, 2016

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனம் உரிய நேரத்திற்கு சேவை வழங்கும் விமான சேவை தரப்படுத்தலில் முன்னேற்றமடைந்துள்ளதாக  உலக விமான பயண தரவு ஆராய்ச்சி அமைப்பான Flightstats அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, உரிய நேரத்திற்கு சேவை வழங்கும் விமான சேவை வழங்குவதில் கடந்த மாதத்தில் 11ஆம் இடம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம், அந்த பட்டியலில் 32 இடத்தில் இருந்தது.

புதிய முன்னேற்றத்தை அடுத்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தை, இது தொடர்பில் மிகவும் பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

625.250.560.350.160.300.053.800.450.160.90

Related posts: