முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Sunday, June 18th, 2023தற்போது இளைஞர் சமூகத்தினர் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சிரமங்களைப் போன்றதொரு நிலைமையை இளைஞர் சமூகம் எதிர்நோக்கி வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடி நிலைமைக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கி, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இளைஞர் யுவதிகள் விடுபடுவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கட்டணங்களில் மாற்றமும் இல்லை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து!
கொரோனா நிலையமாக மாற்றப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரி !
|
|