முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கானதாக அமையவேண்டும் –வேலணையில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

தற்போதைய ஆட்சியாளர்களால் பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவ்வாறான செயற்பாடுகள் மிக குறைவாகவே உள்ளன. இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் தமது தேவைகளை பெற்று வாழ்வியல் நிலையில் முன்னேற்றம் காணமுடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.
அந்தவகையில் இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நாம் முழுமையான வகையில் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியின் வேலணை பிரதேச அலுவலகத்தில் நேற்றையதினம் ஆலோசனை சபை கூட்டம் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளரும் வேலணை பிரதேச சபையின் தவிசாளருமான கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பிரதேச சபையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் கட்சியின் கடந்தகால சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை அனைத்தையும் நாம் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவே மேற்கொண்டுள்ளோம். இது இப்பிரதேச மக்களுக்கும் நன்கு தெரியும் என தெரிவித்த அவர் தற்போது அரசியல் மாற்றம் காரணமாக பல தேவைப்பாடுகள் பூர்த்திசெய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றது.
அந்தவகையில் இப்பிரதேச மக்களது தேவைப்பாடுகள் யாவும் முறையான வகையில் இனங்காணப்பட்டு தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|