முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு டெல்லியில் அதியுயர் பதவி!

Tuesday, April 24th, 2018

முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு அகில இந்தியாவிற்கான கடவுச்சீட்டுக்கு( director consular, passport, visa – cood)  பொறுப்பான இரண்டாம் நிலை அதிகாரியாக அதி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் இவர் தற்போது கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தமிழர்களுக்கான சிறந்த சேவையினை ஆற்றியவர் எனவும் அறிய முடிகின்றது. அத்துடன், தமிழர்களுக்கு மனிதாபிமான ரீதியல் பல்வேறு சேவைகளை இவர் ஆற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: